search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பயணங்களுக்கு ஏற்ற பலகாரங்கள்
    X

    பயணங்களுக்கு ஏற்ற பலகாரங்கள்

    • உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
    • பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும்.

    பயணங்கள் மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு புறப்படும்போதே அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்வது போல பயணத்திற்கு ஏற்ற பலகாரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். அவை உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அமையும்.

    அந்த வகையில் பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும். அதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உண்டு. அது அன்றாட வைட்டமின் ஈ தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.

    பயணத்திற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 5, 6 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அதனை சாப்பிடுவது நொறுக்குத்தீனிக்கு மாற்றாக அமையும். உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு வலு சேர்க்கும்.

    பிஸ்கெட் சாப்பிட விரும்புபவர்கள் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டை உடன் எடுத்துச் செல்லலாம். அது பயணங்களின்போது செரிமான செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உதவி புரியும். நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ், சாக்லெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். கோதுமை பிரெட், உலர் பழங்கள், உலர் தானியங்களில் தயாரான பலகாரங்களையும் பயணத்தின்போது உட்கொள்ளலாம்.

    Next Story
    ×