search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி
    X

    உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும்.

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    Next Story
    ×