search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சுவையான இளநீர் பாயாசம்… கேட்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதுல்ல!
    X

    சுவையான இளநீர் பாயாசம்… கேட்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதுல்ல!

    • உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.
    • இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!

    இளநீர் பாயாசம் என்கிற பெயரைக் கேட்டாலே, உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊறியிருக்க வேண்டும். இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!

    மிக எளிமையாக இந்த இளநீர் பாயாசத்தை செய்துவிடலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் இதை விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    தேங்காய் பால்- 500 மி.லி.

    ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்

    பால்- ஒரு லிட்டர்

    முந்திரி, திராட்சை- தலா 2 ஸ்பூன்

    நெய்- 3 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு கடாயில் முதலில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை சேர்த்து நிறம்மாறும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    இளநீர் முற்றியதாக இல்லாமல் இளம் வழ்க்கையாக இருக்கும் காயாக பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். இளநீர் வழுக்கையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் தேங்காயை இளநீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பெரிய அடிகனமான கடாயில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக குறுகி வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். அதன்பிறகு அடுப்பை அணைத்து சிறிதுநேரம் ஆற வைக்க வேண்டும். மிதமான சூடு இருக்கும் போதே நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை தேங்காய், அரைத்த இளநீர் தேங்காய் விழுது மற்றும் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையை நன்றாக கிளறி அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளற வேண்டும். குறிப்பாக இதனை அடுப்பை அணைத்த பிறகே சேர்க்க வேண்டும். சுவையான இளநீர் பாயாசம் தயார். இதனை சூடாகவும், ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

    பண்டிகை காலங்களிலும், வெயில் காலங்களிலும் இதனை செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டிஷ்சாக இது இருக்கும். கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகளை வாங்கி குடிக்காமல் வித்தியாசமாக இதனை செய்து பருகிப்பாருங்கள். உங்களுடைய ஃபேவரட் லிஸ்டில் கூட இதனை சேர்க்கலாம் அந்த அளவில் சுவையாக இருக்கும்.

    Next Story
    ×