என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
பாதவெடிப்பு நீங்க இதை செய்தால் போதும்
- வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான்.
- பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை.
வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.
பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...
செய்முறை-1
தேவையான பொருள்கள்
வெள்ளை வினிகர்
கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)
ஆலிவ் ஆயில்
வெந்நீர்
செயல்முறை
முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
அதன்பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.
செய்முறை-2
தேவையான பொருள்கள்
அவகடோ - ஒன்று
வாழைப்பழம் - இரண்டு
செயல்முறை
அவகெடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும். இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.
இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்பு குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.
செய்முறை 3
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய்
காபி தூள்
நாட்டுச்சக்கரை
பாதாம் எண்ணைய்
எலுமிச்சை சாறு
செய்முறை:
பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.
பூசணி பேஸ்ட்டுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின்னர், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்