search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வறண்ட கூந்தலுக்கு முட்டை ஹேர்மாஸ்க்
    X

    வறண்ட கூந்தலுக்கு முட்டை ஹேர்மாஸ்க்

    • தலைமுடி வறட்சி அதிகரிக்கும்போது நுனிகளில் வெடிப்பு அதிகமாகும்.
    • தயிர் மற்றும் அவகேடோ பழங்களை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முட்டை தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மிக முக்கியப் பொருள். முட்டை நம்முடைய தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷ்னராகவும் தலைமுடி சேதமாவதை தடுக்கவும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் முடியின் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.

    தலைமுடி வறட்சி அதிகரிக்கும்போது நுனிகளில் வெடிப்பு அதிகமாகும். அதேபோல முடி உதிர்தல், பொடுகு என ஒவ்வொரு பிரச்சனையாக அதிகமாகும். வறண்ட கூந்தலுக்கு முட்டை ஹேர்மாஸ்க் ஏற்றது.

    தயிர் - 1 கப்

    முட்டை வெள்ளைக்கரு - 2

    அவகேடோ - 2 ஸ்பூன்

    முட்டையின் வெள்ளைக்கருவை தனியே பிரித்து எடுத்து நன்கு அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தயிர் மற்றும் அவகேடோ பழங்களை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அவகேடோ மற்றும் தயிர் சேர்க்கப்படும்போது கட்டிகள் ஏற்படலாம். அதனால் கட்டிகள் இல்லாமல் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் வேர்க்கால்களில் அப்ளை செய்து குறைந்தது அரைமணி நேரம் வரை தலையில் வைத்திருக்க வேண்டும்.

    இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தும்போது அவகேடோவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் தயிர் ஆகிய இரண்டும் தலைமுடியின் வறட்சியை நீக்கி பளபளப்பாக வைத்திருக்கச் செய்யும்.

    Next Story
    ×