search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய்

    • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
    • உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.

    மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

    குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


    மீன் எண்ணெயில் உள்ள நன்மைகள்:

    சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது.

    ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.

    இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த ரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

    இது போன்று மீன் எண்ணெய்களை பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

    Next Story
    ×