search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?
    X

    தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?

    • திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
    • வாசனை திரவியங்கள் தங்க நகைகளின் பொலிவை குறைக்கக்கூடும்.

    தங்க ஆபரணங்களை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதன் பொலிவை தக்க வைக்க முறையாக பாராமரிக்க வேண்டும். அழுக்கு, அழகு சாதனப் பொருட்கள், ரசாயனங்கள் உள்பட ஏராளமான அம்சங்கள் தங்கத்தின் பொலிவு குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் அணிகிறீர்களோ அந்த அளவுக்கு தங்கத்தின் பளபளப்பும், மினுமினுப்பும் குறையக்கூடும்.

    வாசனை திரவியங்கள், மாய்ஸ்சுரைசர்கள் கூட தங்க நகைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவற்றின் பொலிவையும் குறைக்கக்கூடும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் பொலிவை இழக்க தொடங்கும்போது, ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்றில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே சுத்தம் செய்துவிடலாம்.

    அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். அந்த நீர் அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. இளஞ்சூட்டுடன் இருக்க வேண்டும். அதில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் மென்மை தன்மை கொண்ட டிடர்ஜெண்ட் ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் 'டிஸ்வாஷ்' ஒரு டேபிள்ஸ்பூன் கலக்க வேண்டும்.

    இந்த கரைசலில் தங்க நகைகளை ஊற வைக்க வேண்டும். நகைகள் அனைத்தும் நீரில் நன்கு மூழ்கி இருக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகைகளை வெளியே எடுத்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் மென்மை (சாப்ட்) தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகளின் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அப்போது பிரஷை கொண்டு நகைகளை கடினமாக துடைக்கக்கூடாது. அப்படி செய்தால் நகைகளில் கீறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நகைகளை சுத்தம் செய்வதற்கு ஷாம்புவும் பயன்படுத்தலாம்.

    நகைகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து தண்ணீரில் அலசிய பின்னர் டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் மீது வைப்பதை தவிர்க்க வேண்டும். அவையும் நகைகளில் சேதம் ஏற்படுத்தக்கூடும். பருத்தித் துணி மீது நகைகளை உலரவைப்பதுதான் சரியானது. பின்பு பருத்தி துணிகளை கொண்டு நகைகளை துடைத்தெடுத்து விடலாம். நகைகளை அதற்குரிய பெட்டிகளில்தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.

    Next Story
    ×