search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இயற்கையாகவே சருமத்தை டீடாக்ஸ் செய்வது எப்படி?
    X

    இயற்கையாகவே சருமத்தை டீடாக்ஸ் செய்வது எப்படி?

    • கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படுகிறது.
    • குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும்.

    பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது? இன்று பலரும் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறே சருமத்தில் கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படுகிறது.


    இதில் சிலர் சந்தைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கி சரும ஆரோக்கியத்தை பராமரிக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ரசாயனப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படலாம். அதே சமயம், சருமத்தை உள்ளிருந்தே டிடாக்ஸ் செய்வது மிகவும் அவசியமாகும்.


    தண்ணீர் அருந்துவது:

    உடல் சோர்வாக உணரும்போது உடல் சில நச்சுகள் மற்றும் அதிகப்படியான கழிவுகளை உள்ளே வைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் உபாதைகள் மட்டுமல்லாமல், மந்தமான தன்மை ஏற்படலாம். நாள்தோறும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்றி இயற்கையான பளபளப்பைத் தருகிறது.


    ஆரோக்கியமான உணவுகள்:

    பால் பொருட்கள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலிருந்து விடுபட்ட உணவைத் திட்டமிட வேண்டும். உடலை சரியாக மீட்டமைக்கவும், உள்ளே இருந்து சேதத்தை சரிசெய்யவும் அழற்சி எதிர்ப்பு உணவைப் பின்பற்றுவது அவசியமாகும்.

    பால் மற்றும் சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளும் போது எரிச்சல், வீக்கம் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தலாம். எனவே தெளிவான சருமத்திற்கு 3 நாள் டிடாக்ஸ் டயட்டுடன் தொடங்கலாம். அதன் பிறகு, படிப்படியாக அதிகரிக்கலாம்.


    மூலிகை தேநீர்:

    மூலிகை தேநீர் சிறுநீரகம், நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் போன்றவற்றிலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஏனெனில், இதில் நச்சுக்கள் அதிகளவு காணப்படலாம்.

    அதன் படி கிரீன் டீ, புதினா டீ, கெமோமில் டீ, ரூயிபோஸ் டீ போன்றவற்றில் சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. இதனை அருந்துவது சருமத்தை டிடாக்ஸ் செய்ய உதவுகிறது.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

    குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். எனவே சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையுடன் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.


    புரோபயாடிக் உணவுகள்:

    நார்ச்சத்துக்களைப் போலவே புரோபயாடிக் நிறைந்த உணவுகளும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் வழிகளை ஆதரிப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமும் நன்கு பராமரிக்கப்படுகிறது.

    Next Story
    ×