என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
ஒரிஜினல் முத்து கண்டறிவது, பராமரிப்பது எப்படி?
- முத்துக்கள் மிகவும் மென்மையானவை.
- சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம்.
ஒரிஜினலுக்கும் போலிக்கும் பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது. சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம். முதல் டெஸ்ட், முன் பற்களில் முத்தை வைத்து மெதுவாக பிரஷ் செய்வது போல தேய்க்க வேண்டும். பற்களில் 'கரகர' என்ற மெல்லிய சத்தத்துடன் உராய்வுத் தன்மை தெரிந்தால் அது ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் சந்தேகமே
இல்லாமல் அது பிளாஸ்டிக். 2வது டெஸ்ட் இரண்டு முத்துகளை எடுத்து உரசுங்கள். உராய்வுத் தன்மை இருந்தால் ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் அது போலி.
இதிலும் திருப்தி ஏற்படாவிட்டால் 3வது கட்ட சோதனையைச் செய்யலாம். அதாவது, முத்தை உடைத்துப் பார்ப்பது. உடைத்ததும் உள் பக்கம் அடுக்கடுக்காக இருந்தால் அது ஒரிஜினல். ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அது போலி. இதற்கும் அடுத்த கட்டம் லேப்புக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்ப்பது. கடைசியாக உள்ள இரண்டு சோதனைகளைச் செய்ய வேண்டிய தேவை அதிகம் ஏற்படாது. முதல் இரு கட்ட சோதனையிலேயே போலியின் சாயம் வெளுத்து விடும். இது தவிர, ஒரிஜினல் முத்தின் எடை அதிகமாக இருக்கும். போலியின் எடை குறைவாக இருக்கும். இப்போது சிலர், எடையை அதிகப்படுத்தி ஒரிஜினல் மாதிரியே விற்கிறார்கள். அவை செராமிக் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டவை. பிளாஸ்டிக்கால் ஆன முத்து வெயிட்லெஸ் ஆக இருக்கும்... விலை குறைவாகவும் இருக்கும்.
எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும். முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வைத்தால், உராய்வு ஏற்பட்டு முத்து நகைகள் சீக்கிரமே பாழாகிவிடும். முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது.
இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது. முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம். முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உடைகளை அணிந்து, மேக்கப் எல்லாம் போட்டு முடித்த பிறகுதான் முத்து நகைகளை அணிய வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்ததும் அவற்றைக் கழற்றி வைத்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடர வேண்டும்.
ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
பெர்ஃப்யூம், சோப் போன்ற ரசாயனப் பொருட்கள் முத்து நகைகள் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
முத்து நகைகளை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருப்பது நல்லது. இப்படிச் செய்தால் முத்து, நீண்ட நாட்கள் உழைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்