என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
முடி உதிர்வை தடுப்பது எப்படி?
- தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
- ஊட்டச்சத்து குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.
உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும் அழைக்கின்றோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆண்களை விட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் கேசத்தைப் பராமரிக்க ஒரு தொகையையே செலவு செய்கின்றனர்.
தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. தலைக்குப் பாதுகாப்பையும், சீதோஷ்ண நிலையை சமப்படுத்தி உடலுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. சித்தர்கள். முனிவர்கள், ரிஷிகள், ஜடாமுடியுடன் காட்சி தருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.
பிறவியிலேயே எல்லோருக்கும் ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆனால் கவலைப்படுவதாலும், கூந்தலை பாதுகாக்காததாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.
நாம் தலை வாரும்போது சீப்பில் சில முடிகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதை அருவருக்கத்தக்க அன்னிய பொருளாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். உதிர்ந்த முடிகளுக்கு புதிய முடிகள் அதே இடத்தில் முளைத்து விடுவது இயற்கை. சில சமயம் இயற்கை தன்மைக்கு மாறுபட்டு தலைமுடி வேரோடு கொட்டுவதையே முடி கொட்டுதல் என்கிறோம்.
முடி கொட்டுதலுக்கான காரணங்கள்:
மனச்சோர்வு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச் சத்தின்மையாலும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.
பெண்களின் உடலில் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.
தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயனக் கலப்புள்ள ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றினாலும் முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்