search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    மீசை, தாடி வளர லேட் ஆகுதா? இதை செய்து பாருங்க!
    X

    மீசை, தாடி வளர லேட் ஆகுதா? இதை செய்து பாருங்க!

    • உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம்.
    • டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும்.

    ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை. இதற்கு மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.

    அதேபோல் குறிப்பாக சோப்பு, முகத்தில் தடவும், கிரீம், வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

    புரோட்டீன் நிறைந்த உணவுகள்

    மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    விளக்கெண்ணெய்

    மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிடமிடம் நன்கு மசாஜ் செய்வது நல்லது.

    தூக்கம்

    தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.

    டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்

    டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்

    ஹேர் க்ரீம்

    ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

    தண்ணீர்

    உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.

    Next Story
    ×