search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க உதவும் இயற்கை வைத்தியம்
    X

    முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க உதவும் இயற்கை வைத்தியம்

    • ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    • முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாகும். எனினும், இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

    முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முக முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இந்த வீட்டு வைத்தியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் முக முடிகளை அகற்றுவதன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

    முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கன்னம், காதுகள், நெற்றி பகுதிக்கு அருகில் முடி வளரத் தொடங்குகிறது.

    முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் முறைகளைக் காணலாம்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிக்க முதலில் பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை சுத்தமாக்கலாம். இதனுடன் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.

    கடலை மாவு மற்றும் மஞ்சள்

    கடலை மாவு மஞ்சள் பேக் முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

    எலுமிச்சை மற்றும் தேன்

    முகப்பொலிவுக்கு ஒரு ஸ்பூன் அளவிலான தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம். இப்போது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

    முட்டை மற்றும் சோளமாவு

    சோளமாவு மற்றும் முட்டையைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவை தலா ஒரு டீஸ்பூன் அளவிலான சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

    இந்த கலவையை பிரஷ் கொண்டு முகம் முழுவதும் மற்றும் முடிகள் உள்ள பகுதியில் நன்கு தடவிக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடம் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை

    கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவிலான சர்க்கரை மற்றும் அரை எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் தடவி பின்னர் கன்னங்கள் மற்றும் நெற்றியில் மெதுவாக தேய்க்க வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள முடியை நீக்க உதவுகிறது.

    பால் மற்றும் மசூர் பருப்பு

    முகத்தை வறட்சி மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, 2 ஸ்பூன் அளவிலான மசூர் பருப்பை பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த பேக் பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை நீக்கி, முகத்தில் உள்ள கறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

    இந்த ஃபேஸ் பேக்குகளின் உதவியுடன் முகத்தில் தோன்றும் முடியை எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நீக்கலாம். எனினும், உணர்திறன் மிகுந்த சருமம் என்பதால், புதிய பொருட்களைத் தேர்வு செய்யும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    Next Story
    ×