என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
முகத்தை பொலிவுபடுத்த ஸ்ட்ராபெர்ரி ஸ்கிரப்
- சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
- அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்வது மட்டுமல்லாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி பிரவுன் சுகர் ஸ்கிரப்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்சை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 3 அல்லது 4
பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும். அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார். இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்