search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர `வேம்பாளம்பட்டை எண்ணெய்
    X

    தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர `வேம்பாளம்பட்டை எண்ணெய்'

    • நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.
    • முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.

    ஆரோக்கியமான, நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் முடி உதிர்வு, வறட்சியான முடி மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.

    இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் ரசாயனங்கள் நிறைந்த முடி பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சில சமயங்களில் பிரச்சனையை அதிகரிக்கலாம்.


    முடி சார்ந்த பராமரிப்புக்கு சில இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். அதன் படி, முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வேம்பாளம் பட்டை ஒரு சிறந்த தேர்வாகும்.

    இந்த வேம்பாளம் பட்டை ஒரு வகை மரத்தின் பட்டை ஆகும். இது உடல் ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய சிறந்த மற்றும் அற்புதமான மூலிகையாகும்.

    முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.


    வேம்பாளம் பட்டை எண்ணெய் செய்முறை:

    பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெயை ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும். டபுள் பாயிலிங் என்பது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதற்கு மேல் இந்த எண்ணெய் உள்ள பாத்திரத்தை சூடாக்க வேண்டும்.

    இந்த எண்ணெயில், எடுத்து வைத்த வேம்பாளம்பட்டையைச் சேர்த்து சூடு செய்யலாம். இதில் எண்ணெய் சூடாக சூடாக, பட்டையிலுள்ள நிறம் முழுவதும் எண்ணெயில் இறங்கும். இந்த எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஒரு ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது பட்டையை வெளியே எடுத்து விடலாம் அல்லது பட்டை எண்ணெய்க்குள் ஊறிக் கொண்டு இருந்தாலும் பிரச்சனை எதுவும் இல்லை. இப்போது வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாராகி விட்டது.

    பிறகு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து 3 நாட்கள் நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின், தலைமுடிக்கு இதை பயன்படுத்தி வரலாம்.

    வழக்கமாக எண்ணெய் தேய்ப்பது போல வேம்பாளம்பட்டை எண்ணெயை தினமும் தேய்க்கலாம்.

    குறிப்பாக, தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேய்த்து, முடியின் வேர்க்கால்களிலும் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு குளிக்கலாம்.


    வேம்பாளம்பட்டை எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடிக்குப் போதிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், மாய்ஸ்சரைசரையும் தருகிறது. இதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால், இது முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.

    மேலும் இது உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. தலைமுடி மற்றும் வேர்க்கால்களுக்குப் போதிய அளவு நீர்ச்சத்துக்களை அளித்து முடியைப் பலப்படுத்த உதவுகிறது.

    குறிப்பாக, முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை முடியை உறுதியாக்கி தலைமுடி உடைவதைத் தடுக்கிறது. மேலும் இது முடியின் வளர்ச்சியையும் வேகமாகத் தூண்டுகிறது.

    Next Story
    ×