search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    காப்பர்டி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை-தீமைகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காப்பர்டி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை-தீமைகள்

    • மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
    • 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.


    இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.

    இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.


    மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும். மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.

    காப்பர் – டி நன்மைகள்

    காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    காப்பர் – டி பயன்படுத்துவதால் உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. கருத்தடை மாத்திரைகளால் உடலில் ஹார்மோன் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் காப்பர்– டி பயன்படுத்தலாம்.

    விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.


    இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.

    பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.


    தீமைகள்

    காப்பர் – டியின் பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு.

    மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம்.

    குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.

    காப்பர் – டி பொருத்தும் போது வலி, செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.

    Next Story
    ×