search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கருப்பையில் நீர்கட்டி இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகுமா?
    X

    கருப்பையில் நீர்கட்டி இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகுமா?

    • பி.சி.ஓ.எஸ். பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
    • மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டும்.

    பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    முகப்பரு

    அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி)

    கூந்தல் உதிர்வு

    தோல் நிறம் மாறுதல்

    உடல் எடை அதிகரிப்பு

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

    பி.சி.ஒ.எஸ் (PCOS or PCOD) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

    Next Story
    ×