search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படுமா?
    X

    அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படுமா?

    • எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை.
    • தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.

    எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சராசரி குடும்பத்தினர் கடனாளி ஆவதோடு மனச்சுமை மட்டுமின்றி பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

    எனவே தமிழகத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி இல்லாதது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

    எனவே அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. அதுபோல் கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆகும் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு மருத்துவ மனைகளில் தான் அதிகப்படியான பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஊக்கத்தொகையும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதால் பலரும் மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான ஆய்வுக்கூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையே நீடிக்கிறது. அதில் ஆய்வக வசதிகளை செய்தால் குழந்தைக்காக ஏங்கும் ஏழை, எளிய தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    Next Story
    ×