என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
ஆபீஸ் டென்ஷனை குறைப்பது எப்படி?
- உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள்.
- தினமும் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.
சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்
தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.
2. 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்'
ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். உங்கள் வீட்டு மாடிப்படி ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேன்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.
3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்
தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.
4. ஒரு நாவல் எழுதுங்கள்
ஒரு நாளில் உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை 1500 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள். 30-வது நாள் 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.
5. காதலிக்க பழகுங்கள்
உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.