என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
கர்ப்ப கால தசைப்பிடிப்பும்... இயற்கை முறையில் தீர்வும்...
- கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
- கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது
கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.
கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.
கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் .
'சோம்பல் முறிப்பது' என்ற உடலை 'ஸ்ட்ரெட்ச்' செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும்.
அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.
தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.
தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்