search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங்
    X

    நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங்

    • ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.
    • நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தையை நிறைத்து கொண்டிருக்கின்றன. நம் வீடு மற்றும் அலுவலக வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன பொருட்கள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. நாம் சந்தையை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டும். போனிலும் சந்தை உள்ளது, வீட்டின் அருகிலும் சந்தை உள்ளது.

    நடை பயிற்சி, தொலைதூர பயணம், மலையேறுதல், கடற்கரை செல்லுதல் போன்ற பழக்கத்தால் மன மாற்றத்தை அடைகிறோம். ஷாப்பிங் செய்வதும் அத்தகைய மன மாற்றத்தை தரக்கூடிய ஒரு பழக்கம் தான். இணைய தளம், கடை வீதி, ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் புதிய பொருட்களை பார்ப்பதால் இருக்கமான மனம் லேசாகிறது நம் அறிவும் விரிவடைகிறது. வாரத்தின் 6 நாட்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பார்த்த பொருட்களையே பார்த்துப் பார்த்து மனம் சலித்திருக்கும். ஒரு நாள் குடும்பத்தோடு ஷாப்பிங் சென்று, மெதுவாக நடந்து, புதிய புதிய பொருட்களை கண்டு, அதன் பயன்பாட்டை அறிந்து, வாங்கி, பயன்படுத்தி மகிழும் கலை தான் ஷாப்பிங் ஆகும்.

    ஷாப்பிங் செய்வதற்கு முன் நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும். அந்த பொருளை வாங்குவதற்கு முன் அந்த பொருள் புதிய பரிமாணத்தில் வந்துள்ளதா என்று சந்தையில் தேடிப்பார்க்க வேண்டும். அப்படி வந்திருந்தால் விலை கூடுதலாக இருந்தாலும் வாங்கலாம். காரணம் பழைய பொருளை விட புதிய நவீன பொருள் நம் வேலை நேரத்தை கூடுதலாக மிச்சப்படுத்தும். இந்த தேடுதலை நீங்கள் முழுமனதோடு செய்து பொருளை வாங்கும் போது மன நிறைவு உண்டாகும். ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.

    மனமும் அறிவும் சூழ்நிலை காரணமாக மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றன. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதற்கும் திரையரங்கு சென்று படம் பார்ப்பதற்கும்; வீட்டில் குடும்பத்தினரோடு உணவு உண்பதற்கும் உணவு விடுதி சென்று உணவு உண்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. புதிய சூழல்; புதிய மனிதர்கள்; புது வகையான உணவுகள்; குடும்பத்தினர் முகத்தில் புது வகை மகிழ்ச்சியை காண்பது, அவர்களுடனான இணக்கம் உயர்வது; மற்ற மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்பை காண்பது, கற்றுக்கொள்வது; இதனால் மனம் புத்துணர்வு பெறுகிறது, புரிந்து கொள்ளும் தன்மையில் சிறப்பான மாற்றம் பெறுகிறது, தன்னம்பிக்கை அடைகிறது. இவை கண்ணுக்கு தெரியாத மனம் செய்யும் ஷாப்பிங். வாழ்வதில் விருப்பத்தை அதிகரிக்க நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் ஆகும்.

    பாட்டி காலத்தில் அரிசி பானை, மரப்பெட்டி போன்றவற்றில் பணத்தை சேமித்தார்கள். அதற்கு வட்டி இல்லை; பணமதிப்பும் குறைந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்று நிதித்துறை சிறப்பாக வளர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் பண மதிப்பை கூட்டும் பல நவீன சேமிப்பு திட்டங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. எதிர்கால ஒய்வு காலத்துக்கு பயன்படும் நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம். சேமிப்பு என்பதும் பயன்படும் ஒரு வகை பொருள் தான். ஷாப்பிங் என்றால் நிகழ்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வது மட்டும் அல்ல எதிர்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வதும் ஷாப்பிங் தான்.

    பணம் ஈட்டுவது நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தான். மேலே கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் செய்யுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

    Next Story
    ×