search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஃபிரிட்ஜை பராமரிக்க சில டிப்ஸ்...
    X

    ஃபிரிட்ஜை பராமரிக்க சில டிப்ஸ்...

    • துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
    • குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

    உங்கள் ஃபிரிட்ஜில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது என்பது சாதாரணமான வேலை அல்ல. ஆனால், அந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்றும், அந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஃபிரிட்ஜை எப்படி சுத்தப்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    முதல் படி, உங்கள் குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கெட்டுப்போன அல்லது காலாவதியான உணவுப் பொருட்களை குளிர் சாதன பெட்டியில் இருந்து அகற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் வீசுவதற்கு இவை முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். ஆதனால், தினமும் உங்கள் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.

    பேக்கிங் சோடா

    உங்கள் ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடாவை வைக்க வேண்டும் அல்லது பேக்கிங் சோடா நிறைந்த ஒரு சிறிய கிண்ணத்தை குளிர்சாதன பெட்டியின் அலமாரியில் வைக்கவும். இது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி அவற்றை அகற்ற உதவும். இதனை 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    காபி பொடி

    குளிர்சாதன பெட்டியில் புதிதாக அரைக்கப்பட்ட காபி பொடியை கிண்ணத்தில் வைக்கவும். காபி பொடி உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாசனையை உறிஞ்சி மறைக்க உதவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் அவற்றை மாற்ற வேண்டும்.

    வெண்ணிலா சாறு

    வெண்ணிலா சாற்றில் ஒரு பருத்தி உருண்டை அல்லது ஒரு துணியை ஊறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெண்ணிலா ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டுள்ளது, இது மற்ற வாசனைகளை மறைக்க உதவும்.

    சிட்ரஸ் தோல்கள்

    எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மற்றும் பழங்களின் தோலை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சிட்ரஸ் பழத்தோல்கள் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை கொண்டவை. இவை இயற்கை எண்ணெய்களை வெளியிடுகின்றன.

    வெள்ளை வினிகர்

    தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர் ஆகியவற்றில் சம பாகங்களை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை கொண்டு உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் உட்புறத்தைத் துடைக்கவும். வினிகர் கெட்ட நாற்றங்களை அகற்ற உதவும். இப்போது உங்கள் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசாது.

    Next Story
    ×