search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அரிப்புக்கு காரணமும்... தீர்வும்...
    X

    கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அரிப்புக்கு காரணமும்... தீர்வும்...

    • கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன.
    • உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஒரு பிரச்சனை தான் கர்ப்ப காலத்தில் அரிப்பு உண்டாவது, உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    பொதுவாகப் பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஐந்து மாதங்களுக்கு மேல் வயிற்றுப் பகுதியின் சருமப் பகுதி விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். அப்போது, ஒரு மாதிரியான நமைச்சல் உருவாகி, அரிப்பு ஏற்படும். இதுதான் காரணமே தவிர, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முடி அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

    அனைத்து கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த அரிப்பு உண்டாவது.. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்று கைகள் துடித்தாலும் கூட, அரிப்பு உண்டாகும் போது சொறியக்கூடாது. இவ்வாறு சொறிந்தால் அரிப்பு அதிகரிக்க தான் செய்யும்.. எனவே மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்.

    அரிப்பு உண்டாகும் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சதை மடிப்புகள் வயிற்றுப் பகுதிகள் போன்ற இடங்களில் வியர்வை அல்லது குளித்து முடித்த பின் ஈரமாக இருப்பது போன்றவை இருக்க கூடாது. இவை அரிப்பை உண்டாக்கும் என்பதால் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில் கொப்புளங்கள் வருவதை தடுக்கலாம்.

    சில பெண்கள் ஆறாவது மாதத்திலும், சிலர் எட்டாவது மாதத்திலும் இந்த அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளித்துவிடலாம்.

    இதனால் அரிப்பு, தழும்பைத் தவிர்க்கலாம். அரிப்பெடுக்கும் நேரங்களில் மேலே சொன்ன எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவியும் வரலாம். சிலருக்குப் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். எனவே, அரிப்பு எடுக்கும்போது மருத்துவரிடம் காட்டி அதற்கான தீர்வைத் தேடுங்கள்.

    Next Story
    ×