search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது எதனால்?
    X

    மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது எதனால்?

    • பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம்.
    • மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை இழக்கிறார்கள்.

    உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட நாப்கின், டேம்பன் மாற்றுகிறார்கள். சிலர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள்.

    அதிக ரத்தப்போக்கிற்கான அறிகுறிகள்:

    * ஒரு பெண் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நாப்கின் பயன்படுத்துவது. அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாப்கீனை பயன்படுத்துவது.

    * மாதவிடாய் நாட்கள் வழக்கத்தை விட அதிக நாட்கள் நீண்டு இருப்பது.

    * மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    * அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வழக்கத்தை விட அதிக உடல் சோர்வு.


    அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்:

    இளம் வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஈஸ்ட்ரோஜெனுக்கும், புரோஸ்ட்ரோஜென்னுக்கும் இடையில் உண்டாகும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

    இளம் பருவத்தில் கருப்பை செயலிழப்பு, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் அதிக உதிரப்போக்கை உண்டாக்குகிறது.

    கருப்பை நோய் இருந்தாலும் அல்லது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

    மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

    Next Story
    ×