என் மலர்
பெண்கள் உலகம்
பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம்?
- ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுகிறது.
- PCOD யால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகலாம்.
பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே முகத்தில் அதிகமாக முடி வளர்வதை பார்த்திருப்போம். ஆனால், சில நேரங்களில் ஒரு சில பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இவ்வாறு இயல்புக்கு மாறாக பெண்களின் முகத்தில் அதிகமாக முடி வளர்வது உடல்நல அபாயத்தைக் குறிக்கிறது.
ஹிர்சுட்டிசம்:
பொதுவாக ஹிர்சுட்டிசம் என்பது உடலின் சில பகுதிகளில் முடி அதிகமாக இல்லாத அல்லது குறைவாக இருப்பதைக் குறிப்பதாகும். அவ்வாறே பெண்களுக்கு முகத்தில் தோன்றும் அதிகமான முடி வளர்ச்சியானது ஹிர்சுட்டிசம் என அழைக்கப்படுகிறது.
இது சுமார் 5-10 சதவீத பெண்களை பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கருப்பை அல்லது அட்ரீனலைக் குறிக்கக் கூடிய ஹைபராண்ட்ரோஜெனிசமாக இருக்கலாம்.
ஹிர்சுட்டிசம் ஒரு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. குறிப்பாக, இது இளம் பெண்களில் காணப்படுகிறது.
பொதுவாக பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹிர்சுட்டிசம் ஆனது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம்
பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது நீர்க்கட்டி பிரச்சனையான PCOD பிரச்சனையால் ஏற்படுகிறது. இந்த PCOD யால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகலாம். பெண்களின் உடலில் ஏற்படும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை கருமுட்டையை பாதிக்கிறது.
இதனால் அதிகப்படியான ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன்கள் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, ஆண்களைப் போன்று பெண்களுக்கும் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது.
முகத்தில் உள்ள முடியை எப்படி நீக்குவது?
சில பெண்கள் முகத்தில் தோன்றும் இந்த அதிகப்படியான முடியை நீக்குவதற்கு பியூட்டி பார்லர் சென்று முடியை நீக்குவர். ஆனால், இது தற்காலிக தீர்வாகத் தோன்றினாலும் முழுமையான தீர்வாக அமையாது.
இன்னும் சிலர் முகத்தில் உள்ள முடியை நீக்க, சில மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். ஆனால், இவை நிரந்தரத் தீர்வாக அமையாது.
முகத்தின் முடியை போக்குவதற்கு PCOD-யில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மாவுச்சத்து குறைவான உணவுமுறையைக் கையாள வேண்டும். உடல் பருமன் அல்லது உடல் எடை குறைவு இரண்டில் எந்த நிலையிலும் PCOD இருக்கும் போது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் கட்டுப்படுத்த இந்த டயட் சிறந்த தேர்வாகும்.
எனவே, அன்றாட உணவில் மாவுச்சத்தை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், ஆரோக்கியமான புரதங்கள், கொழுப்புகள் நிறைந்த டயட் முறைகளை பின்பற்ற வேண்டும்.
PCOD உள்ளவர்கள் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். எனினும், இதற்கு சிறந்த தீர்வாக குறைந்த கார்ப் டயட் என்ற குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
எனவே PCOD பிரச்சனை உள்ள பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் அதிக முடி வளர்ச்சியைத் தவிர்க்க Low carb உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.