என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏன்...?
- பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
- முதல் மூன்று மாதங்களில் இருந்து தொடங்குகிறது.
கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களில் தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதியில், இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்:
ஹார்மோன் மாற்றங்கள்
கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதற்கு மேல், உங்கள் சிறுநீரகங்கள், உங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற கடினமாக உழைக்கின்றன.
அதிக திரவம் கொண்ட சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பை கருப்பையை அழுத்தினால், அதை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் தான் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள்.
வயிறு மற்றும் கருப்பை வளர்தல்
உங்கள் கர்ப்ப காலம் தொடரும் போது, உங்கள் உடல் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தொடங்குகிறது. அதேநேரத்தில், உங்கள் வளர்ந்து வரும் கருப்பை வயிற்று குழிக்குள் உயர்ந்து, உங்கள் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த காரணங்களுக்காக, இரண்டாவது ட்ரிமெஸ்டரில் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுவார்கள். மேலும் உங்கள் கருப்பையில் உங்கள் கருவில் உள்ள குழந்தை இடுப்புக்குள் மூழ்கி சிறுநீர்ப்பையில் அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏற்படும்.
சிறுநீர் பாதை நோய் தொற்று
அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் ஒரு பகுதியா அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.
சிறுநீர் பாதை நோய் தொற்று என்றால், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, காய்ச்சல், சிறுநீர் அடர்த்தியாக இருப்பதைக் காணலாம் அல்லது கழிப்பறையில் ரத்தத்தைப் பார்க்கலாம். சிறுநீர் கழிப்பதற்கான வலுவான தூண்டுதலையும் நீங்கள் உணரலாம், ஆனால் சில துளிகள் மட்டுமே வெளியே வரும்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 24 வாரங்கள் வரை சிறுநீர் பாதை நோய் தொற்று ஆபத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர் பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரை அணுகலாம். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.
கர்ப்ப கால நீரிழிவு
கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், பொதுவாக கர்ப்பத்தின் இது ஒரு தற்காலிக நீரிழிவு நோயாகும். கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்ப கால நீரிழிவு நோயை மருத்துவர்கள் பொதுவாக பரிசோதிப்பார்கள்.
கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நீரிழிவு பொதுவாக மறைந்துவிடும்.
தொடர்ச்சியான தாகம், குமட்டல் அல்லது சோர்வுடன் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை தாமதிக்காமல் அணுகவும்.
மேலும் சில காரணங்கள்:
கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறைய தண்ணீர் அல்லது பிற திரவங்களை இரவு நேரத்தில் குடிப்பது. கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகம் குடிப்பது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்