என் மலர்tooltip icon

    அந்தமான் நிகோபார்

    • அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
    • சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவிஜயபுரம்:

    சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.

    தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

    அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.

    நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.

    வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.

    சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.

    ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    அந்தமான் கடல் பகுதியில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    இன்று மாலை சுமார் 6.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

    அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    • இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
    • அந்தமான் கடலில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

    அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அதிகாலை 1.43 மணி அளவில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஏற்கனவே அந்தமான் கடலில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனால் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகம் எழுதிய எஸ்.ஜி. சூர்யா.
    • புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி.

    சாவர்க்கரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், "தாய்நாட்டின் சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் ஜிக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தான் எழுதி வந்த "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

    அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்படிருந்த அறைக்கு நேரில் சென்ற எஸ்.ஜி. சூர்யா அவர் எழுதிய "வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை" புத்தகத்தை சாவர்க்கரின் புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பின்னர் சாவர்க்கர் சிறையில் பயன்படுத்திய உரை, தட்டு உள்ளிட்ட பொருட்களைப் பார்வையிட்ட அவர், சிறை வளாகத்தில் இருந்த சாவர்க்கர் சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    • நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

    அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

    இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும், அதனருகே சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

    இதேபோன்று, நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் உத்தரகாண்டின் தலைநகர் டேராடூன் நகரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    முன்னதாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நள்ளிரவு 12.18 மணியளவில் 2.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேசமோ ஏற்படவில்லை என தகவல்

    அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்தமான் நிகோபார் தீவில் புதன்கிழமை காலை 7.53 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இந்தோனேசியாவை தொடர்ந்து இப்போது அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

    போர்ட்பிளேர்:

    அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு.
    • ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளது.

    அந்தமான் & நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இதன் ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • தீவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு அந்தமான்- நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது.
    • நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    போர்ட்பிளேயர்:

    அந்தமான்-நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.9 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    • நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின்படி, கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.

    மேலும், உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

    ×