search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தெலுங்கு டைட்டன்ஸ் அணி நான்காவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

    இறுதியில், 35-34 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இது தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெற்ற நான்காவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்றாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால், யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், உபி யோதாஸ் அணியை 33-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் 3வது வெற்றி ஆகும்.

    • சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரை சேர்ந்தவர் முகமது அமீர் தொழிலதிபர் குடும்பத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு திருநங்கைகளை அழைத்து இருந்தார்.

    இந்த விழாவில் சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடிய திருநங்கைகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ மூலம் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
    • 85 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், அறிவார்ந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அவர்களுடைய கருத்துகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    1993-ம் சட்டத்தின்படி இதற்கு முன் கல்வி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூகப் பொருளாதார விவரங்களை சேகரிக்கும்.

    இந்த பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இரக்கிறார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் தொடக்க பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும். ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை பெறுவார்கள். சமூகம், கல்வி, வேலை, பொருளாதாம், அரசியல் போன்ற தரவுகளை சேகரிப்பாளர்கள். மொத்தமாக 85 ஆயிரம் பணியில் ஈடுபடுத்தபட இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதியை உறுதி செய்வதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

    • சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
    • சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாடிக்கையாளரை ஏமாற்றி அதிக பணம் வசூலித்ததாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது.

    ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், "ஸ்விக்கி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். எனது வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிமீ ஆகும். ஆனால் 9.7 கி.மீ-ஆக இருந்த டெலிவரி தூரத்தை வேண்டுமென்றே 14 கி.மீ-ஆக அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக 103 வசூலித்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த இழப்பீடு தொகையை ஸ்விக்கி நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் எருமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாநிலம் முழுவதும் எருமைத் திருவிழா களை கட்டியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி துன்னபோத்து என்ற எருமைத் திருவிழா மாநில திருவிழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆண்டுதோறும் எருமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற எருமை மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், மாலை, தோரணங்கள் அணிவித்து நாராயணகுடாவில் இருந்து வீதிகள் வழியாக நர்சிங் மாட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்டன.

    மாட்டுச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட எருமை மாடுகளை பலரும் போட்டி போட்டு லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கினர்.

    பின்னர் விலை கொடுத்து வாங்கப்பட்ட எருமை மாடுகள் ஊர்வலமாக அழைத்து சென்று கைதராபாத்தில் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் எருமைத் திருவிழா களை கட்டியது. 

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • பாட்னா அணி இன்று 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.

    இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடின.

    இறுதியில், பாட்னா அணி, யுபி யோதா அணியை 42-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
    • தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசு தெலுங்கானாவுக்கு சாபம் ஆகிவிட்டது.

    போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டவும், மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை கேட்பதற்காகவும் தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    • 6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் சந்தோஷ் என்பவர் மாணவியிடம் காதல் ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பிய சிறுமி அவருடன் நெருங்கி பழகினார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். இது குறித்து அவருடைய நண்பர்களான சிறுவர்கள் 4 பேரிடம் கூறினார். அவர்கள் சிறுமியை தனியாக அழைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினர்.

    6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அட்டூழியங்களை சிறுமி அமைதியாக சகித்துக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி பள்ளி முடிந்ததும் சிறுமியை சந்தோஷ் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே அவருடைய நண்பர்கள் 4 பேர் இருந்தனர்.

    அவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவி வீட்டிற்கு தாமதமாகச் சென்றார்.

    இரவு வெகு நேரம் கழித்து வந்ததால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் மாணவியிடம் தாமதம் குறித்து கேட்டபோது மாணவி கதறி அழுதார்.

    தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அதிர்ச்சி அடைந்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    போலீசார் சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • 30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
    • இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்

    பார்வையற்ற தம்பதியினர் தங்களது மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் அவருடைய சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலுவா ரமணா அவரது மனைவி சாந்திகுமாரி ஆகியோர் தங்களுடைய இளைய மகன் பிரமோத்துடன் ஐதராபாத்தின் பிளைண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்த பார்வையற்ற தம்பதியினரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

    4 நாட்களுக்கு முன்பு தூக்கத்திலேயே பிரமோத் இறந்துவிட்டதாக தெரிவித்த போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பார்வையற்ற தம்பதியின் மூத்த மகன் பிரதீப் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் பிரதீப்பிடம் அவரது பெற்றோர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

    30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். மேலும் அவரது 2 மகள்களையும் அவரது மனைவி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • பெங்கால் வாரியர்ஸ் அணி இன்றைய போட்டியை சமன் செய்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. ஒரு கட்டத்தில் புனேரி பால்டன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் இடையிலான போட்டி 32-32 என சமனில் சமனில் முடிந்தது.

    நடப்பு தொடரில் சமனில் முடிந்துள்ளது 3வது போட்டி இதுவாகும்.

    புனேரி பால்டன் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

    ×