என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
    • இது ரவிக்குத் தெரியவரவே, இரவில் மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்தவர் 35 வயதான ரவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான மனீஷா என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்.

    இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களது காதலுக்கு மனீஷாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    மேலும், மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.

    இது ரவிக்குத் தெரியவரவே, நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது, மனீஷாவின் குடும்பத்தினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவி இறந்ததைக் கண்ட மனீஷாவின் குடும்பத்தினர் அச்சத்தில் மூழ்கினர். கொலை வழக்கு தன் மீது வந்துவிடுமோ என்ற பயத்தில், மனீஷாவின் மாமா பிண்டூ என்பவர் அங்கியேய தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மனீஷாவின் குடும்பத்தினர் உடனடியாக ரவி மற்றும் பிண்டூ ஆகிய இருவரையும் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    பிண்டூவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே, காதலன் ரவி இறந்த துக்கத்தில் மனீஷாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் மீட்டு அதே சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். தற்போது பிண்டூ மற்றும் மனீஷா ஆகிய இருவரது நிலையும் கவலைக்கிடமாக தெரிகிறது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

    • ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
    • தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

     ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த தீஜா (26 வயது) 2022 ஆம் ஆண்டு முகேஷ் அஹிர்வாரை  திருணம் செய்தார்.

    திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.

    அவர் வீட்டை விட்டு அதிகம் விலகி இருந்த முகேஷ் செல்லும்போதெல்லாம் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து நேற்று முன் தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டுள்ளார்.

    நேற்று, மீண்டும் உடலுறவு கொள்ள முயன்றபோது தீஜா கடுமையாக எதிர்வினை ஆற்றினார். இதனால் கோபமடைந்த முகேஷ் தீஜாவை அவர்கள் வசிக்கும் இரண்டு மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து கீழே போட்டுள்ளார்.

    தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்.

    கணவர் மீது தீஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மருதுவானமையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனருக்கு உதவியாக வந்திருந்த 35 வயது பெண் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு அருகில் மது வாங்கி குடித்து அப்பெண் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை மயக்கம் தெளிந்த அப்பெண், தன்னை தனது மைத்துனர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துப்புரவு ஊழியர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டார்.

    அப்பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று ஜெய்சங்கர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.  

    • சேறு, மழை நீரால் சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்.
    • மாட்டு வண்டியில் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் சேறு, தண்ணீர் தேங்கிய சாலையில் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படும் வீடியோவை வெளியிட்டு, அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசின் வளர்ச்சி இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக இருந்ததால், மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாஜக-வின் தவறான ஆட்சியின் கீழ், உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டி, ஆம்புலன்ஸ் ஆக மாறிவிட்டது. டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாட்டு வண்டிகளில் இயங்குமா?. டெல்லி தொலைநோக்கி அல்லது தேவைப்பட்டால் டிரோன்கள் மூலம் அடுத்த முறை முதல்வர் களத்திற்கு செல்லும்போது, சாலைகள் மற்றும் ஆம்புலன்ஸ் நிலைகள் என்ன? என்பதை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    நேற்று முன்தினம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சத்வா தேரா காயு காட் சானி கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். சாலை சரி செய்யப்படாததால் சேறு மற்றும் மழைநீர் தேங்கியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    3 மணி நேரத்திற்கு பின் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என, முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த கிராமத்தில் 500 பேர் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு பருவமழையின்போது, இதுபோன்ற கஷ்டத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர்.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • நான்கு வயது மகன் சிவான்ஷ் மற்றும் 14 மாத குழந்தை ஆகியோரின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொன்றார்.
    • கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று மாலை, 35 வயதான சங்கீதா தனது  நான்கு வயது மகன் சிவான்ஷ் மற்றும் 14 மாத குழந்தை ஆகியோரின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொன்றார்.

    பின்னர் வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பவம் நடந்தபோது அவரது கணவர் ஹரிச்சந்திரா வீட்டில் இல்லை. தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற சங்கீதா நேற்று காலை கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • மனைவி பிரிந்த நிலையில் ஆண் நண்பரின் தனியாக வசித்து வந்துள்ளார்.
    • தந்தையை பார்க்க வந்த சிறுமியை, நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளை சீரழித்த, ஓரினச்சேரிக்கை பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 32 வயது நபர். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்ததால், ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவருடன், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பரை அந்த அறையில் சேர்த்துக் கொண்டார்.

    இவருக்கும் இடையிலான நட்பு, பின்னர் ஓரினசேர்க்கையாளராக இணைந்து வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் சிறிய அறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தந்தையை பார்ப்பதற்காக, அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இந்த விசயம் அந்த சிறுமியின் நண்பருக்கு ஒரு சில தினங்கள் கழித்து தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து பார்ட்னராக்கிய நிலையில், தனது மகளையே சூறையாடிவிட்டானே என அந்த சிறுமியின் தந்தை கடுங்கோபம் அடைந்தார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிறுமியின் தந்தை, கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

    ராம்பாபு யாதவ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மெடிக்கல் உதவி மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தாய்வழி பாட்டி வீட்டிற்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

    • பச்சிளம் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
    • புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

    அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

    புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

    • புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது.
    • ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ராம்பால் ராவத் என்ற 65 வயதான முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.

    இதை அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். அவர் ராம்பால் ராவத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது. இது ராம்பால் குடும்பத்திற்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    • கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றது.
    • நடுவானில் பறந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக சந்தேகம்.

    கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ 6E-6961 விமானம் 166 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    டெக்னிக்கல் பிரச்சினை (எரிபொருள் கசிவு) சந்தேகத்தில் விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி ஏடிசி-யிடம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    ஏடிசி அனுமதி வழங்க விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணம் செய்த 166 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர், ஸ்ரீநகர் செல்ல பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தது.

    • தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார்.
    • யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா. இவர் தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என கூறி வந்தார்.இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு வந்திருந்தார்.

    தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார். அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்தார். எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்தார்.

    யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×