search icon
என் மலர்tooltip icon
    < Back
    80’s Build up
    80’s Build up

    80’ஸ் பில்டப்

    இயக்குனர்: கல்யாண் எஸ்
    எடிட்டர்:ஷைஜல் பிவி
    ஒளிப்பதிவாளர்:ஜாக்கப் ரத்தினராஜ்
    இசை:ஜிப்ரான்
    வெளியீட்டு தேதி:2023-11-24
    Points:3001

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை27
    Point3001
    கரு

    80-களில் நடக்கும் விஷயங்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கமல் ரசிகரான சந்தானத்தின் வீட்டில் ஒரு கத்தியில் மேப் ஒன்று இருக்கிறது. அதில் புதையலை அடைவதற்கான வழி இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட மன்சூர் அலிகான் கும்பல் புதையலைத்தேடி சந்தானம் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சந்தானத்தின் தாத்தாவிடம் மன்சூர் அலிகான் மியூசியமில் இருந்து வருவதாக கூறி அந்த கத்தியை கேட்கிறார்.

    இதற்கு சன்மானமாக தங்களிடம் இருக்கும் வைரத்தை கொடுக்கிறார்கள். இதை சந்தானத்தின் தாத்தா விழுங்கி  இறந்துவிடுகிறார். உறவினர்கள் அனைவரும் துக்க வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது உறவுக்கார பெண்ணான ராதிகா ப்ரீத்தி வருகிறார். இவரைப் பார்த்ததுமே சந்தானம் காதல் வயப்படுகிறார்.

    அப்போது இவர் தன்னுடைய தங்கையிடம் துக்க வீட்டின் காரியங்கள் முடிவதற்குள் ராதிகாவிடம் காதலை சொல்வேன் என்று சவால் விடுகிறார். இது ஒருபுறம் இருக்க மன்சூர் அலிகான் தாத்தாவின் வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இறுதியில் சந்தானம் தன் காதலை ராதிகாவிடம் சொன்னாரா? மன்சூர் அலிகான் வைரத்தை எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சந்தானத்தின் பல காமெடிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை. கோபம் வரும் அளவுக்கு காமெடி பண்ணாதீர்கள் என்று கொந்தளிக்கும் அளவிற்கு படத்தில் காமெடிகள் இருக்கிறது. கதாநாயகி ராதிகா ப்ரீத்தி அழகான நடிப்பை கொடுத்து கவர்ந்துள்ளார்.

    மேலும், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். ஆனந்த்ராஜ் காமெடிகள் மனதிற்கு ஆறுதல் என்றே சொல்லலாம்.

    இயக்கம்

    80 காலக்கட்டத்தில் நடக்கும் கதை. காமெடியாக திரைக்கதையை அமைக்க நினைத்து அதை சரிவர செய்ய முடியாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.கல்யாண். படம் முழுவதும் ஒரே வீட்டில் நடப்பது சலிப்பை கொடுக்கிறது. அண்ணன் - தங்கை சவால்களிலே படம் பயணிப்பது அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் விறுவிறுப்பும் படத்தில் ஒன்றுமே இல்லை என்பது வருத்தம்.

    இசை

    ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே.

    ஒளிப்பதிவு

    ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    புரொடக்‌ஷன்

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ‘80’ஸ் பில்டப்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×