search icon
என் மலர்tooltip icon
    < Back
    Anjaamai
    Anjaamai

    அஞ்சாமை

    இயக்குனர்: S.P சுப்புராமன்
    எடிட்டர்:ராம் சுதர்ஷன்
    ஒளிப்பதிவாளர்:கார்த்திக் பழனிசுவாமி
    இசை:ராகவ் பிரசாத்
    வெளியீட்டு தேதி:2024-06-07
    Points:824

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை170156157
    Point33946322
    கரு

    நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பற்றிய கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் விவசாயியாக வாழ்பவர் விதார்த். இவருக்கு இரு பிள்ளைகள் மனைவி வாணி போஜனுடன் அழகான வாழ்கையை நடத்தி வருகிறார் விதார்த்.

    இவரது மகன் அரசு பள்ளியில் படித்து மேல்நிலை கல்வியில் மிகச்சிறந்த மதிப்பெண்ணை வாங்குகிறார். அடுத்து மருத்துவராக ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். மத்திய அரசு அப்போது அமல்படுத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு விதார்த்தின் மகனுக்கு ஒரு தடையாக இருக்கிறது, விதார்த் கஷ்டப்பட்டு மகனை கோச்சிங் கிளாசில் சேர்க்கிறார். அதற்கடுத்து என்ன ஆனது, மகனின் கனவை விதார்த் நிறைவேற்றினாரா? மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு அவர்களை எந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? அவர்களுக்கு சமூக பொறுப்புள்ள ரகுமான் எவ்வாறு உதவுகிறார்? என்பதே படத்தின் கதை.

    நடிகர்கள்

    ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக விதார்த் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் வளர, வளர அவர்களின் ஆசைகளுக்காக தங்களை ஓடாய் தேய்த்து வருத்தி உழைக்கும் ஒவ்வொரு தந்தையையும் அப்படியே கண் முன் நிறுத்துகிறார் விதார்த். அவரது நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாத நடிப்பை தந்திருக்கிறார் வாணி போஜன். மனைவியாக, தாயாக கிராமத்து பெண்ணாக மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் வாணி போஜன். மகனாக நடித்துள்ள கிரித்திக் மோகன் நடிப்பும் அபாரம்.

    இயக்கம்

    நம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பட்ட இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர் மையங்கள் எப்படி பணம் சம்பாதித்தனர் என்பதை அப்படியே பட்டவர்த்தமாக, அதேசமயம் மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார் இயக்குனர் சுப்புராமன். படத்தின் முதல் பாதியை மிகவும் நல்ல காட்சிகளையும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை வைத்து ஆர்வமாக கதையை எடுத்து செல்கிறார். ஆனால் இந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் இல்லாதது வருத்தம், இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் ரசிக்க பட்டிருக்கும். தமிழக மாணவர்களின் நீட் தேர்வின் பிரச்சனையையும் , இதனால் எவ்வளவு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனுக்கு பாராட்டுகள்.

    ஒளிப்பதிவு

    கார்த்திக் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.

    இசை

    ராகவ் பிரசாதின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    திருச்சிற்றம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அஞ்சாமை திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×