என் மலர்
கலன்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 330 | 313 |
Point | 52 | 48 |
மகன் கொலைக்கு காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்கும் தாயின் கதை.
கதைக்களம்
நாயகன் யாசர் தனது தாய் தீபாவுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய தாய்மாமா அப்புக்குட்டி. யாசரின் நண்பர் ஒருவர், கஞ்சா விற்கும் கும்பலில் வேலை செய்கிறார். நண்பரின் பிரச்சனைக்காக கஞ்சா கும்பலுடன் மோதுகிறார். இதைத் தொடர்ந்து கஞ்சா கும்பல் யாசர் நண்பன் மூலமாகவே அவரை கொலை செய்கிறது. மகன் படுகொலைக்கு காரணமான கும்பலை பழி தீர்ப்பதற்காக தீபாவும், தாய்மாமா அப்புகுட்டியும் திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் தீபா, அப்புக்குட்டி இருவரும் சேர்ந்து கஞ்சா கும்பலை பழி வாங்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்து இருக்கும் யாசர், சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் சரியான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். தாயாக நடித்து இருக்கும் தீபா, மகன் மீது பாசம், மகன் கொலைக்கு காரணமானவர்களை கொல்ல துடிப்பது என நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருந்தது.
தாய் மாமனாக வரும் அப்புகுட்டி சகோதரி மகன் கொலையாளிகளை தீர்த்துக்கட்டும் காட்சிகளில் மிரள வைத்துள்ளார். பெண் தாதாவாக நடித்து இருக்கும் காயத்ரி, கையில் சுருட்டு, போதை என நடிப்பில் மிரட்டி இருக்கிறார். கஞ்சா கும்பல் தலைவனாக வரும் சம்பத் ராம், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் ஆகியோரது நடிப்பு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
இயக்கம்
மகன் கொலைக்கு காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரமுருகன். படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று விட்டார் இயக்குனர். இதுதான் நடக்க போகிறது என்று நமக்கு முன்பே தெரிந்துவிட்டதால் அதிக சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை நகர்கிறது. கஞ்சாவால் ஏற்படும் தீமை, போலீஸ் காரர்களின் நல்ல குணம், கெட்ட குணம் என திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்ட முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். அதிகம் வெட்டு குத்து, லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை & ஒளிப்பதிவு
ஜெர்சன் இசை மற்றும் ஜெயக்குமாரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
அனுசுயா பிலிம் ப்ரொடக்ஷன் கம்பனி இப்படத்தை தயாரித்துள்ளது.