என் மலர்
நீல நிற சூரியன்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 343 | 327 |
Point | 31 | 27 |
ஒரு ஆணாக பிறந்தவன் ஹார்மோன் வேறுபாடால் அவனுக்குள் ஏற்படும் பெண்ணிய மாற்றத்தை வெளிப்படுத்தும் கதை
கதைக்களம்
அரவிந்த் பிறக்கும்போது ஒரு ஆணாக பிறக்கிறார். நாளடைவில் அவருக்குள் ஹார்மோன் வேறுபாடால் அவருக்கு பெண்ணிய உடல்மொழி வரத்தொடங்குகிறது. அவருக்கும் தன்னை பெண்ணாக காட்ட வேண்டும் என்பதே ஆசை. அரவிந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார்.
தன்னை முழுவதுமாக உடலளவிலும் பெண்ணாக மாற்ற முடிவு செய்கிறார் அரவிந்த். அதற்கு உண்டான சிகிச்சைகளை மேற்கொள்கிறார். அப்பொழுது மனநல ஆலோசகரரான கிட்டி நடராஜை சந்திக்கிறார். அவர் உன்னை முழுவதுமாக பெண்ணாக மாற்றுவதற்கு முன் முதலில் உண்மையான பெண்ணாக நிஜ உலகில் வாழ்ந்துப் பழகு என ஆலோசனை கூறுகிறார்.
இதனால் இந்த உண்மையை வீட்டிலும் மற்றும் வேலைப்பார்க்கும் பள்ளிக்கூடத்தில் கூறுகிறார். ஆனால் இவரது தந்தை கஜராஜ் இதனை ஏற்க மறுக்கிறார். வேலை செய்யும் இடத்திலும் இவரை மறுக்கின்றனர்.
இதற்கு அடுத்து என்ன ஆனது? ஒரு ஆண் பெண்ணாக மாறும் பொழுது ஏற்படும் சிக்கல் என்ன? தன்னை முழுமையான பெண்ணாக அரவிந்த் ஏற்றுக்கொண்டானா? இந்த சமூதாயம் அவனை எப்படி பார்த்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அரவிந்த மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன், முதன்மை வேடத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். ஒரு திருநங்கை இச்சமூதாயத்தில் படும் அவதிகளையும், அவமானங்களையும் கண்முன்னே நிறுத்தியுள்ளார். நம்மை பல மடங்கு யோசிக்க வைத்துள்ளார்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் கிட்டி, அரவிந்தின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அரவிந்தின் உறவினராக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி துணை தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் வேடத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், கெளசல்யா, விஸ்வநாத் சுரேந்திரன், வைதீஸ்வரி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினாலும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இயக்கம்
ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் பல நோய்களைப் போல், பிறந்த பாலினத்தில் இருந்து வேறு பாலினத்திற்கு மாறுபவர்கள், இந்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயனுக்கு பாராட்டுகள். படத்தின் காட்சி அமைப்பை நேர்த்தியாக கையாண்டுள்ளார். படத்தின் சில இடங்களில் கொஞ்சம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது.
ஒளிப்பதிவு
ஸ்டீவ் பெஞ்சமின்னின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
இசை
ஸ்டீவ் பெஞ்சமின்னின் பின்னணி இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
மால மன்யன் இப்படத்தை தயாரித்துள்ளார்.