search icon
என் மலர்tooltip icon
    < Back
    நேசிப்பாயா திரைவிமர்சனம்  | Nesippaya Review in Tamil
    நேசிப்பாயா திரைவிமர்சனம்  | Nesippaya Review in Tamil

    நேசிப்பாயா

    இயக்குனர்: விஷ்ணு வரதன்
    எடிட்டர்:ஸ்ரீகர் பிரசாத்
    இசை:யுவன் ஷங்கர் ராஜா
    வெளியீட்டு தேதி:2025-01-14
    Points:114

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை272
    Point114
    கரு

    ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது.

    விமர்சனம்

    கதைக்களம்

    கதாநாயகனான் ஆகாஷ் முரளி மற்றும் நாயகியான அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இவர்களிடையே அவ்வப்போது சண்டைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. ஆகாஷ் மற்றும் அதிதி இடையே நிறைய மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஏற்படுவதால் இவர்களின் காதல் முறிவடைகிறது . இந்நிலையில் அதிதி- க்கு போர்ச்சுகல் நாட்டில் வேலை கிடைக்கிறது. இதனால் அவர் அங்கு செல்கிறார். சில வருடங்களுக்கு பிறகு ஆகாஷ் முரளிக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அதிதி போர்ச்சுகலில் உள்ள பெரிய தொழிலதிபரை கொலை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் இருக்கிறார் என்று. இதை தெரிந்துக் கொண்ட அவர் அதிதியை காப்பாற்ற போர்ச்சுகல் செல்கிறார். உண்மையில் அதிதி தொழிலதிபரை கொலை செய்தாரா? தொழிலதிபருக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம்? அதிதியை காப்பாற்றினாரா ஆகாஷ் முரளி? இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆகாஷ் முரளி. முயன்ற அளவு அவரின் பங்கை சிறப்பாக நடித்து வெளிப்படுத்தியுள்ளார். காதல், எமோஷன் அலுகை என நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். நாயகி அதிதி துறுதுறுவென நடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். அதேபோல் நடிகர் ராஜா சைலண்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார். முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்குகிறார்கள். கல்கி கோச்சின் அவரது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

    இயக்கம்

    ரொமாண்டிக், திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். விஷ்ணு வரதன் அவரது பாணியில் ஒரு காதல் கதையை இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். கிளைமாக்ஸ் வரும் ட்விஸ்ட் பாராட்டிற்குறியவை.

    இசை

    யுவன் இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

    ஒளிப்பதிவு

    கேமரான் எரிக்கின் ஒளிப்பதிவு மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

    தயாரிப்பு

    XB Film Creators தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×