என் மலர்
நிறங்கள் மூன்று
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 78 | 80 | 137 |
Point | 1155 | 1557 | 48 |
மூன்று நபர்களின் கதையை ஹைப்பர்லிங்க் அம்சத்துடன் எடுக்கப்பட்ட படமாகும்.
கதைக்களம்
துஷ்யந்த் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடத்தில் அம்மு அபிராமியை காதலித்து வருகிறார். திடீர் என்று ஒருநாள் அம்மு அபிராமி தொலைந்து போகிறார். அவரை தேடி துஷ்யந்த மற்றும் அவரது நண்பர்கள் செல்கின்றனர்.
நடிகர் அதர்வா சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை கூறுகிறார் ஆனால் எதுவும் கைக்கூடாமலே போகிறது. இதனால் விரக்தியில் அதர்வா போதை பழக்கத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இயக்குனராக துடிக்கும் அதர்வாவின் கதையை திருடி பிரபல இயக்குனர் படமெடுக்க முயற்சிக்கிறார்.
சரத்குமார் ஒரு கெட்ட காவல் அதிகாரியாக வலம் வருகிறார். பணத்துக்காக எதுவும் செய்யும் ஒரு காவல் அதிகாரியாக இருக்கிறார். சரத்குமாரிடம் பணத்துக்காக ஒரு வேலையை செய்து தரும் படி ஒருவர் கேட்பதால் அதற்காக அவர் பயணிக்கிறார்.
தொலைந்துப்போன அம்மு அபிராமியின் தந்தையான ரகுமான் மகளை தேடி சரத்குமாரிடம் சென்று புகாரளிக்கிறார்.
அம்மு அபிராமி கண்டுபிடிக்க்ப்பட்டாளா? அதர்வா இயக்குனர் ஆனாரா? சரத்குமாருக்கு கொடுத்த வேலை என்ன? அதை அவர் நிறைவேற்றினாரா? இவர்கள் மூன்று நபரின் வாழ்க்கை எந்த புள்ளியில் இணைந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அதர்வா போராடும் இளைஞனாக நடிப்பில் பளிச்சிடுகிறார். போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளிலும், போதை பொருள் பயன்படுத்திய பிறகும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். சரத்குமார் காவல் அதிகாரியாக அவருக்கென ஒரு தனி மிடுக்காக நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை மிகவும் எமோஷனல் ஆக்கியுள்ளார். ரகுமான் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகளை தொலைத்த சோகத்தை கண் முன் கொண்டு வருகிறார். அம்மு அபிராமி மற்றும் துஷ்யந்த் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதையில் சொல்ல முயன்றதுக்கு கார்த்திக் நரேனுக்கு பாராட்டுகள். போதையுள்ள டிரிப்பியான காட்சிகளை திறமையாக காட்சி படுத்தியுள்ளார். திரைக்கதை மெதுவாக நகர்வது படத்தின் மைனஸ். எந்த ஒரு கதாப்பாத்திரத்தின் மீதும் நமக்கு அனுதாபம் வராதது படத்தின் மைனஸ்
இசை
ஜேக்ஸ் பிஜாய் இசை படத்தின் பெரிய பலம்.
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு
டிஜோ டாமி ஒளிப்பதிவில் மூன்று நிறங்களை திறமையாக பதிவுசெய்துள்ளார். ஸ்ரீஜித் சராங்கின் ஒளிப்பதிவு மிகவும் வித்தியாசமாகவும் டிரிப்பியாகவும் அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஐங்கரன் இண்டெர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.