என் மலர்


ஆபரேஷன் லைலா
பள்ளியில் கையவர்களால் பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்கும் கதை.
கதைக்களம்
நாயகன் ஶ்ரீகாந்த் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சித்திகா ஷர்மாவை காதலித்து வருகிறார். இவர்கள் பணியாற்றும் பள்ளியில் திடீரென்று அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. இதற்கு காரணமாக ஒரு பேய் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ஶ்ரீகாந்த். மேலும் தன் நிலைமைக்கு காரணமானவர்களை கொல்ல இருப்பதாக அந்த பேய் ஶ்ரீகாந்திடம் கூறுகிறது.
இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக பழிவாங்க துடிக்கிறது? ஶ்ரீகாந்த் இதை தடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீகாந்த், சூர்யா மற்றும் ரவி என்னும் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்திற்கு பெரியதாக வேற்றுமை இல்லை. போலீசாக வரும் போது கொஞ்சம் கெத்தாக இருக்கிறது. நாயகி சித்திகா ஷர்மா கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, மனோ பாலா ஆகியோர் காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். வனிதா விஜயகுமார் போலீசாக வந்து மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார். வித்தியாசமான வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் ஶ்ரீதர் மாஸ்டர்.
இயக்கம்
பள்ளியில் பேயை வைத்து பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். பிளாஷ்பேக் காட்சியை ஓரளவிற்கு ஏற்கும் படி வைத்திருப்பது சிறப்பு. நாம் ஏற்கனவே கேட்ட கேள்விப்பட்ட விஷயத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
இசை
எஸ்.கார்த்திகா மகாதேவனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
கே.கே.வின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.










