என் மலர்
பகலறியான்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 235 | 239 | 192 |
Point | 159 | 142 | 5 |
ஓர் இரவு போராட்டத்தில் இருந்து எப்படி கதாநாயகன் தப்பித்தார் என்பதை பற்றிய கதை.
கதைக்களம்
இப்படத்தின் கதைக்களம் ஓர் இரவில் நடக்க கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகன் வெற்றி சென்னையில் உள்ள கார் கேரேஜில் வேலை பார்த்து வருகிறார் அந்த கேரேஜை அவரது நண்பன் நடத்தி வருகிறார். அந்த கேரேஜில் பல போதை பொருள் கைமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வெற்றி கதாநாயகியான அக்ஷராவை காதலித்து வந்த நிலையில் அன்று இரவு அவளுடன் ஊரை விட்டு செல்வதாக திட்டம் தீட்டுகிறார்.. போதைப் பொருள் பறிமாற்றத்திலும் சிக்கலும் அதே இரவு ஏற்படுகிறது அதனால் காரணம் இல்லாமல் ஒரு கும்பல் வெற்றியை துரத்திக் கொண்டு இருக்கிறது. இந்த இரவு போராட்டத்தில் இருந்து வெற்றி எப்படி தப்பித்தார், வெற்றியை ஏன் அந்த கும்பல் துரத்துகிறது, அக்ஷயாவை கரம் பிடித்தாரா? என்பது படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்து இருக்கும் வெற்றி இப்படத்தில் குறைந்த வசனத்தை பேசி கண்களின் மூலமே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியான அக்ஷரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சைலண்டாக நடித்த முருகன் கொடுத்த வேலையை செய்துள்ளார்.
இயக்கம்
இயக்குனர் முருகன் ஒரு குறிப்பிட்ட இரவில் இரண்டு நபர்களை சுற்றி நடக்கும் ஒரு ஹைப்பர்லிங்க் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார். இரண்டு கதாபாத்திரங்களும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரே மாதிரியான கதை பின்னணி இருக்கிறது. ஹைப்பர் லிங்க் கதைக்களத்தை எடுத்து இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் குழப்பி தள்ளியுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் வரும்வரை படத்தின் கதையை நாம் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டதுப் போல் அங்கும் இங்கும் விலகி நிற்கிறது. இந்த கதையை இன்னும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் இயக்கி இருந்தால் படம் மக்களால் ரசிக்க பட்டிருக்கக்கூடும்.
இசை
படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் விவேக் சரோ.
ஒளிப்பதிவு
படம் முழுவதும் இரவில் நடப்பதால் அதை திறமையாக கையாண்டுள்ளார் அபிலாஷ்
தயாரிப்பு
லதா முருகன் பகலறியான் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.