என் மலர்
வணிகம் & தங்கம் விலை

X
மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடக்கம்.. வர்த்தகர்கள் அதிர்ச்சி
By
மாலை மலர்28 Feb 2025 11:58 AM IST

- சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது.
- ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன.
வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 28) மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 22,300-க்கு கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன. இந்த தொடர் சரிவு இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X