என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக செயல்பட்ட மாணவி
- ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.
- மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்திருந்தார்.
அதன்படி காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் கலெக்டராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.
இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு நாள் கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.