என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிட்லபாக்கம் ஏரிக்கரையில் திறந்தவெளியில் எரிக்கப்படும் உடல்கள்
- திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
- சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டது சிட்லபாக்கம். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க சுமார் ரூ.23 கோடி செலவில் தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தனிநடை பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஏரியை சுற்றி நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும் சிட்லபாக்கம் ஏரியை முன்மாதிரியான ஏரியாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிட்லபாக்கம் ஏரியின் ஒரு புறத்தில் 44-வது வார்டுக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஏரிகரையை ஒட்டி பழைய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளி உள்ளது.
இந்நிலையில் இந்த சுடுகாட்டில் பழைய முறைப்படியே கட்டைகளை வைத்து திறந்தவெளியில் இறந்தவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்த போதே பாலாஜி அவன்யூ பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சி உடன் இணைந்த பின்பும் இந்த சுடுகாட்டை நவீனமாக்க இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பை விட தற்போது சிட்லபாக்கம் பகுதியில் மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கூடுதலாக உடல்கள் வருவதால் ஏரிக்கரையோரம் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை. பொதுப்பணி துறையின் அனுமதி கிடைத்த பின்பு இங்கு நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்