என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார்-மோட்டார் சைக்கிள்கள் - பொருட்கள் சேதம்: 'திடீர்' செலவுகளால் பொதுமக்கள் திணறல்
- பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.
- கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் போல் இருக்கிறது.
கீழ் தளங்களில் உள்ள வீடுகளை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
வெள்ளம் வடிந்த பின்னர் தங்களது வீடுகளை போய் பார்த்த மக்கள் சேதமான பொருட்களை கண்டு கண்ணீர்விட்டனர். சேதம் அடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கட்டில் மெத்தைகளை எப்படி வாங்கப் போகிறோம் என நினைத்து பொதுமக்கள் வேதனையில் தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே வீடுகளின் அருகில் மேடான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி கடுமையான சேதம் அடைந்து உள்ளன. இவைகளை பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்டு பழுதாகியுள்ள டி.வி., வாஷிங் மிஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களாலும் கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.
மாதச் சம்பளத்தில் குடும்பம் நடத்துவோர் ஏற்கனவே இ.எம்.ஐ. தவணை தொகையால் பார்த்து பார்த்து செலவழித்து வரும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டு உள்ள இந்த திடீர் செலவு அவர்களது கழுத்தை நெரிப்பதாகவே மாறி இருக்கிறது.
சென்னையில் கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
இதுபற்றி திருநின்றவூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயபால் கூறும்போது, "கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த நிலையில் எனது வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரமாவது செலவு வைத்துவிடும். வேறு வழியின்றி பழுது நீக்க எடுத்து வந்திருக்கிறேன்" என்றார்.
கொரட்டூரைச் சேர்ந்த வாகன பழுது நீக்கும் கடை உரிமையாளர் எம்.கோபால கிருஷ்ணன் கூறும்போது, 'பழுதான ஒரு வாகனத்தை சரி செய்ய குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேலாகும். மேலும் என்ஜின் பழுதடைந்து இருந்தால், ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்' என்றார்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும் போது, ஆட்டோவுக்குள் நீர் புகுந்தால் சரிசெய்ய ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். அதேநேரம் ஒரு வாரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இவற்றை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஜாகிர் ஹூசேன் கூறும்போது, 'கார்களை பொறுத்தவரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். வெள்ளத்தில் சிக்கினால் காப்பீடு கிடையாது என பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே அரசு உதவ வேண்டும்' என்றார்.
முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்