என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வணிகர் தின மாநாடு குறித்த சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா தலைமையில் நாளை நடக்கிறது வணிகர் தின மாநாடு குறித்த சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா தலைமையில் நாளை நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/03/17/1850681-30.webp)
X
வணிகர் தின மாநாடு குறித்த சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா தலைமையில் நாளை நடக்கிறது
By
Suresh K Jangir16 March 2023 3:45 PM IST (Updated: 17 March 2023 10:48 AM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது.
- தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40-வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம், மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதி லிங்கம் முன்னிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓட்டல் ஜெய்டூணில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 7 மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநில இணைச் செயலாளர், பழைய பொருள் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
X