என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தங்கள் கடமையை செய்துள்ளது- எடப்பாடி பழனிசாமி
- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை.
- மனித உரிமை பற்றி பேச தி.மு.க.வினருக்கு தகுதி கிடையாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் சட்டத்துக்கு புறம்பாக மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளித்ததன் மூலம் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.
வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் வேண்டுமென்றே சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தங்கள் கடமையை செய்துள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் புதிய வழக்கு அல்ல. 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறார்.
ஆவணங்களை கொடுப்பேன் என்று கூறியவர் அதனை வழங்க வேண்டியதுதானே. மனித உரிமை பற்றி பேச தி.மு.க.வினருக்கு தகுதி கிடையாது.
அமலாக்கத்துறை கைது செய்திருப்பதால் தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.






