என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் வேலை கிடைக்காததால் கஞ்சா வியாபாரிகளாக மாறிய என்ஜினீயர்கள்
- 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்
போரூர்:
மதுரவாயல், அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரியான ரிஷி(23), என்ஜினீயரிங் பட்டதாரிகளான ரூபஸ்(23), அவினாஷ்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் மூலம் கோய முத்தூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் விசார ணையில் தெரிய வந்துள்ளது.