என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காற்றின் வேகம் அதிகரிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு.
புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்க ளில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பருவ நிலை மாற்றம் குறித்து மீன்வளத் துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.