search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிவாயு குழாய் திட்டம்: 2 மாதமாக நீடிக்கும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
    X

    எரிவாயு குழாய் திட்டம்: 2 மாதமாக நீடிக்கும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்

    • மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
    • விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    ஐ.டி.பி.எல்.நிறுவனம் கோவை முதல் கர்நாட காவின் தேவனகொந்தி வரை எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்தை அமைத்து கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெறவில்லை.

    சட்டவிரோதமாக ஒரு அறிவிப்பை மட்டும் வழங்கி கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோநெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு , அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பதித்து வருகிறது. பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.

    அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.

    ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோ மீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.

    கோவை முதல் கர்நாடகாவின் தேவனகொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டரில் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதனை கண்டித்தும், எரிவாயு குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×