search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு
    X

    முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பாக மாடு பிடி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விழா கமிட்டியினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சைக்கிள், பைக், குக்கர், டிரஸ்சிங் டேபிள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×