search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை- உயர் அதிகாரிகள் பங்கேற்பு
    X

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை- உயர் அதிகாரிகள் பங்கேற்பு

    • கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது.
    • தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தக்காளி விலை எப்போதும் இல்லாத அள வுக்கு விலை உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துவிட்டது. இந்த விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த மாதம் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்த போது கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர சில ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பல பேருக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் தக்காளி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது. இப்போது ஒருகிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலையை கட்டுப்படுத்த அரசு இப்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை மொத்தமாக வாங்கி கொள்முதல் விலைக்கே கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யவும் விரிவான ஏற்பாடுகளை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×