என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
- மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
- ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தருமபுரி:
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதே அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நீரானது ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.