என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துறைமுகம் தொகுதியில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
- கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது.
- இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.
சென்னை:
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரிமுனையில் ரம்ஜான் பண்டிகை பெருநாள் விழா சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மற்ற இயக்கங்களுக்கும் தி.மு.க.வுக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே புரியும். தேர்தல் நடக்க இருப்பதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் இயக்கமல்ல தி.மு.க. வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம். குறிப்பாக இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம்.
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வது என்னுடைய குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் உணர்வை தருகிறது. நம்முடைய தமிழ்நாடு என்பது திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட மண். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம். பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர், துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் பரிமளம், வட்ட செயலாளர்கள் பார்த்திபன், கவியரசு, பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்