என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறுவன் மூழ்கி பலியான சம்பவம்: பெரியமேடு நீச்சல் குளம் மூடப்பட்டது
- நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.
- நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
சென்னை பெரியமேடு மைலேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பழகிய 7 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவத்தையொட்டி அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியம் அருகில் மைலேடி பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் நீச்சல் பழகும் பெரிய நீச்சல் குளம் உள்ளது.
இந்த நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.
தினமும் ஏராளமான சிறுவர்கள் நீச்சல் பழகி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் கொசப்பேட்டை ராகேஷ் என்பவரின் மகன் தேஜா (வயது 7) நீச்சல் பழகி கொண்டிருந்தான்.
அப்போது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான். இதுகுறித்து சென்னை பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் ஹரிக்குமார் தலைமையில் விசாரணை செய்து வந்தனர். இதையொட்டி நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு நீச்சல் குளத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. அது பற்றிய அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.